வியாழன், 16 ஜூன், 2011

1952 முதல் தமிழ்நாட்டில் நடந்த 14 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி விவரங்கள்:

தமிழ்நாட்டில் முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952

தமிழ்நாட்டில் முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952 ஆம் ஆண்டில் நடந்தது. காங்கிரசு கட்சி மற்றும் இந்திய பொதுவுடைமக் கட்சி ஆகியன முதன்மையான கட்சிகளாக இருந்த அத்தேர்தலில் - வன்னியர் கட்சிகளான ராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 4 இடங்களிலும், மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி 3 இடங்களிலும் தனித்து நின்று வென்றன. 


தமிழ்நாட்டில் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1957


காங்கிரசு கட்சி அரசியல் இயக்கமாகவும், திமுக, பார்வார்டு ப்ளாக், ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரசு ஆகிய கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாததால் அவைகளின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில் மூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் 1962

காங்கிரசு கட்சி, திமுக, பார்வார்டு ப்ளாக், CPI, சுதந்திரா கட்சி ஆகியன போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் நான்காவது நாடாளுமன்ற தேர்தல் 1967

திமுக, சுதந்திரா கட்சி, CPI(M), முசுலீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.  காங்கிரசு மற்றும் CPI ஆகியன தனித்தனியாக போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் ஐந்தாவது நாடாளுமன்ற தேர்தல் 1971

திமுக, காங்கிரசு கட்சி, பார்வார்டு ப்ளாக், CPI, முசுலீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி.

காமராசரின் நிறுவனக் காங்கிரசு, ராசாசியின் சுதந்திரா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.

CPI(M) தனித்து போட்டி.

தமிழ்நாட்டில் ஆறாவது நாடாளுமன்ற தேர்தல் 1977

அ.தி.மு.க., காங்கிரசு, CPI கட்சிகள் கூட்டணி.

நிறுவன காங்கிரசு, சனதா கட்சி, தி.மு.க கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் ஏழாவது நாடாளுமன்ற தேர்தல் 1980

திமுக, காங்கிரசு, முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க., சனதா கட்சி, காங்கிரசு (அர்சு) கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் எட்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1984

அதிமுக, காங்கிரசு, காந்தி காமராஜ் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, சனதா தளம், CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி

தமிழ்நாட்டில் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் 1989

அதிமுக, காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, சனதா தளம், CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி

தமிழ்நாட்டில் பத்தாவது நாடாளுமன்ற தேர்தல் 1996

அதிமுக, காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, த.மா.க, CPI கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதினோராவது நாடாளுமன்ற தேர்தல் 1998

அதிமுக, பாமக, பாசக, மதிமுக, சனதா கட்சி, தமிழக ராசீவ் காங்கிரசு கட்சிகள் கூட்டணி

திமுக, த.மா.க, CPI கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1999

திமுக, பாமக, பாசக, மதிமுக கட்சிகள் கூட்டணி.

அதிமுக, CPI, CPI(M), காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதிமூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் 2004

திமுக, பாமக, CPI, CPI(M), காங்கிரசு, ம.தி.மு.க கட்சிகள் கூட்டணி.

அதிமுக, பாசக கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதினான்காவது நாடாளுமன்ற தேர்தல் 2009

திமுக, காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணி.

அதிமுக, ம.தி.மு.க,  பாமக, CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி.

----இவ்வாறாக கடந்த கால தேர்தல் வரலாற்றில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் அடிக்கடி கூட்டணி மாறி தேர்தலை சந்தித்துள்ளன. (இதையே, நாடாளுமன்ற தேர்தல் - அதனை அடுத்துவந்த சட்டமன்ற தேர்தல் என்ற அளவில் ஒப்பிட்டு பார்த்தால்கூட உடனடி தாவல்கள் பல நடந்துள்ளது தெரியவரும்.) 

உண்மை இவ்வாறிருக்க, பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

தமிழக தேர்தலில் கூட்டணி வரலாறு

முதலாவது சட்டமன்ற தேர்தல் 1952

தி.மு.க போட்டியிடவில்லை.  காங்கிரசு, CPI கட்சிகள் முதன்மையாக போட்டியிட்டன.

காங்கிரசு கட்சியில் வன்னியர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதால் - தனித்து களமிறங்கிய மாணிக்கவேல் நாயகரின் காமன்வீல் கட்சி 6 இடங்களிலும் இராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமாக அன்றைய தமிழ் பகுதியில் இருந்த 190 சட்டமன்ற இடங்களில் 25 இடங்களை வன்னியர்கட்சிகள் தனித்து வென்றன.

தேர்தலுக்கு பின்பு காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் - விடுதலைக்கு பிந்தைய தமிழ்நாட்டில் முதன்முதலாக வன்னியர் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரசு ஆட்சியமைத்தது.

(பின்னர் வன்னியர்கட்சிகள் கலைக்கப்பட்டு தலைவர்கள் காங்கிரசிலும், காங்கிரசு எதிர்ப்பில் வளர்ந்த தொண்டர்கள் தி.மு.க'விலும் இணைந்தனர்.)


இரண்டாவது சட்டமன்ற தேர்தல் 1957

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.


மூன்றாவது சட்டமன்ற தேர்தல் 1962

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

தி.மு.க'வுடன் CPI, பார்வார்டு பிளாக், முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி அமைத்தன.


நான்காவது சட்டமன்ற தேர்தல் 1967

தி.மு.க. கூட்டணியில் இராசாசியின் சுதந்திரா கட்சி, CPI(M), பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

CPI தனித்து போட்டியிட்டது.


ஐந்தாவது சட்டமன்ற தேர்தல் 1971

தி.மு.க. கூட்டணியில் இந்திரா காங்கிரசு, CPI, பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக், தமிழ்தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான இசுதாபன காங்கிரசுடன் இராசாசியின் சுதந்திரா கட்சி, இந்திய குடியரசு கட்சி, சம்யுக்த சோசலிச கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகியன கூட்டணி அமைத்தன.


ஆறாவது சட்டமன்ற தேர்தல் 1977

தி.மு.க தனித்து போட்டி.

அ.தி.மு.க' வுடன் CPI(M), பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக் கூட்டணி.

இந்திய தேசிய காங்கிரசுடன் CPI கூட்டணி,

சனதா கட்சி தனித்து போட்டி.


ஏழாவது சட்டமன்ற தேர்தல் 1980

தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க - சனதா கட்சி கூட்டணி.


எட்டாவது சட்டமன்ற தேர்தல் 1984

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு மற்றும் காந்தி காமராசர் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI(M), CPI, சனதா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.


ஒன்பதாவது சட்டமன்ற தேர்தல் 1989

அ.தி.மு.க (செயலலிதா) - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க (சானகி) - தமிழக முன்னேற்ற முன்னணி (சிவாசி) கூட்டணி.

தி.மு.க - சனதா தளம், CPI(M) கூட்டணி.


பத்தாவது சட்டமன்ற தேர்தல் 1991

அ.தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI, CPI(M), சனதா தளம், தாயக மறுமலர்ச்சி கழகம் கூட்டணி.

பா.ம.க தனித்து போட்டி.


பதினோராவது சட்டமன்ற தேர்தல் 1996

தி.மு.க'வுடன் த.மா.க, CPI, இந்திய தேசிய லீக், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு, முசுலீம் லீக், பார்வர்டு பிளாக், அனைத்திந்திய குடியரசு கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிகள் கூட்டணி.

ம.தி.மு.க'வுடன் CPI(M), சனதா தளம், சமாச் வாதி சனதா கட்சிகள் கூட்டணி.

பா.ம.க - திவாரி காங்கிரசு (வாழப்பாடி இராமமூர்த்தி) கூட்டணி.


பன்னிரெண்டாவது சட்டமன்ற தேர்தல் 2001

அ.தி.மு.க'வுடன் தா.ம.க., பா.ம.க., காங்கிரசு, CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் பா.ச.க., MGRஅ.தி.மு.க கட்சிகள் கூட்டணி.


பதிமூன்றாவது சட்டமன்ற தேர்தல் 2006

தி.மு.க'வுடன் காங்கிரசு, பா.ம.க., CPI(M), CPI, முசுலீம்லீக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், பார்வார்டு பிளாக், மூ.மு.க., இந்திய யூனியன் முசுலீம் லீக். சனதா தளம் கட்சிகள் கூட்டணி.

--இவ்வாறாக கடந்த 50 ஆண்டுகால சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், குறிப்பாக 1962 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க'வோ அல்லது அ.தி.மு.க'வோ ஒரு தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் அடுத்த தேர்தலை சந்திக்கவில்லை.